எதிர்பாராத விதமாக மரக்கிளை முறிந்து விழுந்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஆயுதப்படை காவலருக்கு நிதி உதவி - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 27 மார்ச், 2025

எதிர்பாராத விதமாக மரக்கிளை முறிந்து விழுந்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஆயுதப்படை காவலருக்கு நிதி உதவி

 

IMG_20250327_211610_491

எதிர்பாராத விதமாக மரக்கிளை முறிந்து விழுந்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஆயுதப்படை காவலருக்கு நிதி உதவி.


மதுரை மாநகர ஆயுதப்படையில் பணிபுரிந்த, இரண்டாம் நிலைக்காவலர் 4165 மோகன் குமார் அவர்கள் தனது வீட்டின் அருகில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, எதிர்பாரதவிதமாக அருகில் இருந்த மரத்தின் கிளை முறிந்து ஏற்பட்ட விபத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.   அச்சமயம் மாநகர காவல் சார்பாக, காவலர்களிடம் நிவாரண உதவி தொகையாக ரூபாய் 4,64,000 திரட்டப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில்  கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி காவலர் உயிரிழந்தார். காவலரின்  மருத்துவ சிகிச்சைக்காக செலவு செய்யப்பட்ட தொகை போக .அதில் மீதமுள்ள தொகையான 2,90,000 – ரூபாயை காவலரின் குடும்ப நலன் கருதி , நேற்று  (26.03.2025) காவலரின் குடும்பத்தாரிடம்   மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., வழங்கினார்கள்  இந்நிகழ்வில்  மாநகர துணை ஆணையர்  (தலைமையிடம்) மற்றும் காவல் உதவி ஆணையர் (ஆயுதப்படை) ஆகியோர்  உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad