கன்னியாகுமரி மாற்றுத்திறனாளி க்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது
தமிழ்நாடு முதல்வரின் மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை, வீதி நாடகம் மற்றும் கிராமிய கலைகள் மூலமாக மக்களுக்கு கொண்டு செல்லும் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தினை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலைமாமணி பழனியா பிள்ளை, விழிப்புணர்வு பாடகர் கண்டன்விளை ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் தாமஸ், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் அன்பழகன், கழக நிர்வாகிகள் ரூபின், ஷ்யாம், வேலு மற்றும் கிராமிய கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர், ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக