தமிழ்நாடு முதல்வர், கழக தலைவர் தளபதியார் அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 7 மார்ச், 2025

தமிழ்நாடு முதல்வர், கழக தலைவர் தளபதியார் அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!

 தமிழ்நாடு முதல்வர், 
கழக தலைவர் தளபதியார் அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்! 

திருப்பத்தூர் , மார்ச் 7 -

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பில்
சந்திரபுரம் பகுதியில் நடைப்பெற்ற 
 தமிழ்நாடு முதல்வர், கழக தலைவர் தளபதியார் அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான 
அண்ணன் க.தேவராஜி MLA அவர்களும், 
தலைமைக் கழக பேச்சாளர் ஆருர் மணிவண்ணன் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழா சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சதிஷ்குமார் அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். 
இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் சி.சத்தியமூர்த்தி, கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக் குமார், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யாசதீஷ்குமார்,பொதுக்குழு உறுப்பினர் சத்தியநாராயணன், 
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மு.க.அருள்நிதி, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் எஸ்.மேகநாதன் மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad