மின்கழக தொழிலாளர்கள் சந்தா முறைகேடுகள் குறித்து பா.மணிமாறன் மீது புகார்
மின்வாரிய ஆளுங்கட்சி தொழிற்சங்கமான தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பா.மணிமாறன் மீது தொழிலாளர்கள் சந்தா மற்றும் நன்கொடை பணத்தை முறைகேடு செய்ததாக புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.இதைப் பற்றி உறுப்பினர் பேசியதாவது:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொது செயலாளராக பதவி வகிக்கும் பா.மணிமாறன் அவர்கள் சங்க தொழிலாளர்களால் சந்தா மற்றும் நன்கொடையாக செலுத்திய பணத்தை முறைகேடு மற்றும் கையாடல் செய்ததாகவும், சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அடித்து கொடுத்து அதனை மாநில தேர்தல் ஆணையத்தில் கணக்கு காண்பிக்கப்படாமல் சங்க கணக்கில் இருந்து எடுத்துள்ளதாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு (வழக்கு எண்.C.S.No.21/2025) 12.02.2025 அன்று பதிவு செய்யப்பட்டு மனுதாரர் வழக்கறிஞராக C.உமாசங்கர் அவர்கள் ஆஜராகி மாண்புமிகு நீதிபதி கே.குமரேஷ்பாபு அவர்களின் முன்னிலையில் 26.03.2025 அன்று முழுமையாக விவாதிக்கப்பட்டு வருகின்ற ஓரிரு நாட்களில் தீர்ப்பு வழங்கும் நிலையில் உள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக