குடியாத்தம் , மார்ச் 14--
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தமான 7 குத்தகை இனங்களுக்கு இன்று காலை 11:30 மணி அளவில் பொது ஏலம் மற்றும் மூடி முத்திரை இட்ட ஒப்பந்தப்புள்ளி நகராட்சி ஆணையாளர் முன்னிலையில் கோரப் பட்டதில் பொது ஏலத்தில் எவரும் கொள்ளவில்லை முத்திரையிட்ட ஒப்பந்த புள்ளியானது குத்தகை ஏலம் கோரிய 21 நபர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு
கீழ்கண்டவாறு அதிகம் ஏலம் கோரப் பட்டுள்ளது
1. தரணம்பேட்டை தினசரி காய்கறி சந்தை S A அர்ஷத் 1.26.99.999 ரூ
2 .அரிசி கடைகள்N ரவி ரூ 5 25 000 ரூ
3 .தரணம்பேட்டை தினசரி சந்தை
இறைச்சி கடைகள் S A அர்ஷத்
ரூ 2 50 000 ரூ
4 .பழைய மற்றும் புதிய பேருந்து நிலைய சுங்க கட்டணம் R சோமு 15.00.100 ரூ
ஆடுவதை சாலை B பிரித்திவிராஜ்
6.12.000 ரூ
5. புதிய பேருந்து நிலையம் கட்டண கழிப்பிடம் D குமார் 11.26 756 ரூ
6.பழைய பேருந்து நிலைய கட்டண கழிப்பிடம் M பிச்சாண்டி ரூ 5.75 750
மேற்கண்ட குத்தகை ஏலம் மூலம் குடியாத்தம் நகராட்சிக்கு 1. 72 கோடி வருவாய் கிடைக்கும் இத்தொகை கடந்த ஆண்டு ஏலத்தொகையை விட 60% உயர்வாகும் அதிகபட்ச ஏலம் கோரியவர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி சட்டம் 1998 பிரிவு 78( 3 ) நகர மன்ற ஒப்புதல் பொருட்டு 01 04 2025 அன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பணி உத்தரவு நகராட்சி மூலம் வழங்கப்படும்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக