நாசரேத்தில் தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 1 மார்ச், 2025

நாசரேத்தில் தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா.

நாசரேத்தில் தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா

மார்ச் 1, திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்த நாள் விழா நாசரேத் பேரூர் கழகத்தின் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நாசரேத் பேருர் தி.மு.க சார்பாக கழக தலைவரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. கே.வி.கே சாமி சிலை அருகில,; பேருந்து நிலையம், சந்தி ஆகிய இடங்களில் வெடி வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. 

பின்பு திருமறையூர் முதியோர் இல்லம், பிரகாசபுரம் கருணை இல்லம், சர்வேட் காண்வென்ட் சிறுவர் இல்லங்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. பின்பு திருவள்ளுவர் காலணியில், கழக கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் கருத்தையா தலைமை தாங்கினார். மாவட்ட பிரதி நிதி அன்பு தங்க பாண்டியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாமல்லன், முன்னாள் அவை தலைவர் அருள் ராஜ் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் தெற்கு மாவட்ட பொருப்பாளர் கெர்சோம்கிறிஸ்டியான், காமராஜ் ஆதித்தனார் கழக மாவட்ட செயலாளர் ஐஜீனியஸ் கலந்து கொண்டனர். நாசரேத் பேரூர் கழக செயலாளர் ஜமீன் சாலமோன் சிறப்புரையாற்றி, கழக உறுதி மொழி ஏற்றனர். 

இந்த நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் உடையார், மாற்கு, ஜெபகிருபை, சரவணன், இளங்கோ, அன்பு, மனோகரன், சிலாக்கியமணி, ஜெபசிங், ஜான்பென்சன், சேகர், தேவதாஸ், ஒன்றியபிரதிநிதி ஹாரிஸ் ரவி, ராமசந்திரன், ஞானராஜ், மாணிக்கராஜ், தேவதாஸ் மற்றும் நகர தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ராஜ் குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் பிரதீப், ஏசாதுரை 

மற்றும் வார்டு பிரதிநிதிகள் கிறிஸ்னகுமார், சுந்தரம், பால்ராஜ், மணிகன்டண், ஜஸ்டீன் ஜெபக்குமார் அப்பாத்துரை, சுந்தரம், ராபின்சன், நீல்துரை, ஜெயகுமார் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad