வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மது பிரியர்கள் அட்டகாசம் சமூக விரோத செயல்கள் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் பிரவீன் குமார் கோரிக்கை!
குடியாத்தம் , மார்ச் 4 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்
சிறை துறை வட்டாட்சியர் குடியிருப்பு நீதிபதி குடியிருப்பு வேளாண்மை துறை தீயணைப்பு துறை கருவூலம் போன்ற அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது
இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்த வண்ண உள்ளார்கள்.
இப்பகுதியில் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு பாட்டில் களை வளாகத்தில் ஆங்காங்கே வீசி விட்டு உடைத்து விட்டு செல்கிறார்கள் இதனால் பொதுமக்களுக்கு பெரிதும் இடையாக உள்ளது மறுபுறம் பொது மக்களுக்கு மனுக்கள் எழுதிக் கொடுப்பதற்காக சிலர் அமர்ந்து கொண்டு மனு எழுதுவதற்கு 30- ரூபாயும் அந்தப் பணியை தாங்களே முடித்து கொடுப்பதாக கூறி 3 ஆயிரம் முதல் 6000 வரை வசூல் செய்து விடுகிறார்கள் இதனால் அவ்வப்போது வளாகத்தில் சிறு சிறு கூச்சல் சண்டைகள் நடைபெறுகிறது எனவே மேற்படி சம்பவங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைத்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக