குடியாத்தம் , மார்ச் 5 -
வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாக எல்லைக்குட்பட்ட குடியாத்தம், அணைக்கட்டு மற்றும் கே.வி குப்பம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைப்பெற்று வரும் கிராம மற்றும் வார்டு காங்கிரஸ் கமிட்டிகளை சீரமைக்கும் பணியினை ஆய்வு செய்யும் கூட்டம் இன்று (05.03.2025) புதன்கிழமை காலை 11 மணியளவில் குடியாத்தம் NMD அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (ம) தலைவர் கு.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் சங்கர், MD.ராகிப், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம், குடியாத்தம் நகர பொறுப்பாளர் நவீன்பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் விஜயேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், இயக்க சீரமைப்பு மேலாண்மை குழுவின் மண்டல தலைவர் குலாம் மொய்தீன், வேலூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் விஜய் இளஞ்செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வேலூர் மத்திய மாவட்டத்தில் நடைபெற்று வரும் கிராம மற்றும் வார்டு காங்கிரஸ் கமிட்டிகளை ஆய்வு செய்து, நிறைவுற்ற கமிட்டிகளின் படிவங்களை பெற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றினர். நிகழ்வில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் கிருபானந்தம், திருப்பத்தூர் மாவட்ட பொருளாளர் கொத்தூர். மகேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் வட்டார தலைவர்கள் ஜோதி கணேசன், விஜயகுமார், தனசேகரன், தாண்டவமூர்த்தி, பள்ளிகொண்டா பேரூர் தலைவர் அக்பர் பாஷா, மாநில எஸ்ஸி பிரிவு செயலாளர் சுப்பிரமணி, மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் திருமதி. கோமதி குமரேசன், எஸ்ஸி பிரிவு மாவட்ட தலைவர் அன்பரசன், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் ராஜசேகரன், RGPRS மாவட்ட தலைவர் ஆனந்தவேல், ஓபிசி பிரிவு மாவட்ட தலைவர் ராகேஷ், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஆடிட்டர் ஹரிபாபு மாவட்ட துணைத் தலைவர் சேகரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் இர்ஷாத் அஹ்மத், சரவணன், யுவராஜ், குடியாத்தம் நகர பொறுப்பாளர்கள் இலியாஸ் பாஷா, பொன்னரசன் மற்றும் நிர்வாகிகள் ரங்கநாதன், ஜெயகோபி, மனோகரன், சத்தியமூர்த்தி, குணசேகரன் , வெங்கடேசன், ஸ்டாலின், உமாபதி, ஆரோன், பன்னீர் செல்வம், சிக்கந்தர் பாஷா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் குடியாத்தம் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீராங்கன் நன்றியுரை கூறினார்.நிகழ்வில் மறைந்த குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயன் அவர்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக