கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற் பயிற்சி மையம்: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 16 மார்ச், 2025

கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற் பயிற்சி மையம்:

IMG-20250316-WA0023

கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற் பயிற்சி மையம்:   


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்,  கோல்டன் கேஸ் எஜன்சீஸ், பயிற்சி மைய குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் எரிவாயு சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு தொழிற்பயிற்சி மையம் முதல்வர் சாஜி ஜோர்ஜ் தலைமை தாங்கினார்


எரிவாயு சிலிண்டர்கள் பாதுகாப்பு மற்றும் சிக்கனம் குறித்து கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் எரிவாயு நிறுவன பணியாளர்கள் தமின், ஜோசப், கவின்குமார் ஆகியோர் விளக்கம் அளித்து பேசும்போது எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்துவதன் மூலம் வீடுகளில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் பொழுது சீல் உடைக்கப்பட்டுள்ளதா, எடை சரியாக உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். அதுபோல சிலிண்டர்களின் உள்ள வாழ்வு சரியாக நடைபெற்று உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை  சிலிண்டர் ரெகுலேட்டர் மற்றும் வயர்களை மாற்றி அமைக்க வேண்டும். எரிவாயு சிலிண்டர்கள் சார்ந்த உபகரணங்கள் வாங்கும் பொழுது isi முத்திரை உள்ளவற்றை வாங்கி பயன்படுத்த வேண்டும். சிலிண்டர் நேராக வைத்து பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், சிலிண்டர்களின் கசிவுகள் இருப்பின் ஜன்னல் கதவுகளை திறந்து விட்டு சிலிண்டரை வெளியே எடுத்து வருவதற்கான வாய்ப்பு உருவாக்கிக் கொள்ள வேண்டும். சிலிண்டர்கள் ஏற்படும் குறைபாடுகளை 1906 என்கிற உதவி எண்ணில் தகவல் தெரிவிக்காலாம், சமையல் செய்யும் முன் எல்லா பொருட்களையும், காய்கறிகளில் தயார் படுத்திக் கொண்டு சமைக்கும் போது எரிவாயு சிக்கனத்தை பெற முடியும் முறையான சிலிண்டர் உபயோக மூலம் பாதுகாப்பை பெற முடியும் என்றனர் நிகழ்ச்சியில் ஐடிஐ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad