வெயிலின் தாகத்தை தணிக்க தர்பூசணி பழத்தை ருசித்த பாகுபலி யானை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 மார்ச், 2025

வெயிலின் தாகத்தை தணிக்க தர்பூசணி பழத்தை ருசித்த பாகுபலி யானை

 

IMG-20250314-WA0141

பாகுபலி காட்டு யானை மீது பட்டாசு வெடித்து விரட்டி வனத்துறை வனஆர்வலர்கள் அதிருப்தி!!


மேட்டுப்பாளையம் அருகே வனத்திலிருந்து வெளியேறிய யானை ஊட்டி சாலையோரம் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்த தர்பூசணி பழங்களை ருசித்து சாப்பிட்டது.


வனத்துறையினர் விரைந்து வந்து யானையை வனத்திற்குள் விரட்டினர். மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, சமயபுரம், நெல்லித்துறை, ஓடந்துறை, பாலப்பட்டி, வச்சினம்பாளையம், சிறுமுகை, லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த யானை பகல் வேளைகளில் வனப்பகுதிக்குள்ளும், இரவு வேளைகளில் விலை நிலங்களுக்குள்ளும் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதம் செய்து வருகிறது.


இதுவரை இந்த யானை மனிதர்கள் எவரையும் தாக்கவோ, தாக்க முயற்சிக்கவோ இல்லை என்றாலும் பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து அச்சத்தில்ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை ஜாலியாக மேட்டுப்பாளையத்தில் ஊட்டி சாலையில் நடந்து வந்தது. தொடர்ந்து அங்கு தனியார் பெட்ரோல் பங்க் அருகே விற்பனைக்காக சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்த தர்பூசணி பழங்களை ஒவ்வொன்றாக எடுத்து ருசி பார்த்தது.அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யானையை விரட்ட முற்பட்டு சப்தமிட்டும் எவரையும் சட்டை செய்யாமல் தர்பூசணி பழங்களை தின்றது. இதையறிந்த மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானை பாகுபலியை வனத்திற்குள் விரட்டியடித்தனர். இதனால் ஊட்டி சாலையில் சற்று நேரம் பரபரப்பாக சூழல் ஏற்பட்டது."


 கோவை வனக்கோட்டம் தள்ளாடும் நிர்வாகம் பாகுபலி காட்டு யானைக்கு வனத்துறை பாதுகாப்பு வழங்கப்படுமா வன ஆர்வலர்கள் கேள்வி??????


கோவை வனக்கோட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மேற்பார்வையில் உள்ள மேட்டுப்பாளையம் வனசரகத்தில்  யானைகள் மீது பட்டாசு வெடிக்கக் கூடாது என்ற நீதிமன்றம் உத்தரவை மீறி ஊட்டி சாலையில் உள்ள கடையில் தர்பூசணி சாப்பிட்டுவிட்டு செல்லும்போது பாகுபலி காட்டு யானை மீது பட்டாசு வெடித்து விரட்டினர்.


பாகுபலி காட்டு யானைக்கு வனத்துறை எந்த விதத்தில் பாதுகாப்பு செய்துள்ளனர்  என்பதை உறுதி செய்ய வேண்டும் இதனால் வன விலங்குகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.  தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத் குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad