இராமநாதபுரம் மின் கம்பத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியார் கேபிள் நிறுவனங்கள் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 29 மார்ச், 2025

இராமநாதபுரம் மின் கம்பத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியார் கேபிள் நிறுவனங்கள்

IMG-20250329-WA0012

 இராமநாதபுரம் மின் கம்பத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியார் கேபிள் நிறுவனங்கள்


இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தனியார் இணையதள வயர்களை அரசு மின்கம்பத்தில் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்துவருகின்றனர்.தற்போது கீழக்கரை நகர் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருவதாலும் அடிக்கடி மின் பழுது ஏற்படுவதாலும் அதனை சரி செய்யும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபாட்டு வருகின்றனர் மின் கம்பத்தில் தனியார் இணையதள வயர்கள் கட்டப்பட்டுள்ளாதால் மின் வாரிய ஊழியர்கள் பழுது பார்க்கும் போது மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.மின் கம்பங்களில் ஆக்கிரமிப்பு சம்மந்தமாக  மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த பயனும் இல்லாத சூழ்நிலை நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்,இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் 


இணையதள வயர்களை தனியாக கம்பங்கள் அமைத்து கொண்டு செல்ல வேண்டும். அதுதான் முறையானது. ஆனால் மின்கம்பங்களின் வழியாக இணையதள வயர்கள்,கேபிள் ஒயர்களை கட்டி கொண்டு செல்லப்படுவது தவறானது. பலத்த காற்று வீசும் சமயங்களில் மின் வயர்களும் இணையதள வயர்களும் ஒன்றுடன் ஒன்று உரசும் சூழ்நிலை ஏற்படும் போது மின்தடை மற்றும் மின்சாதன பழுதுகள் ஏற்படுகின்றன. மேலும் மின்கம்பிகள் மீது கேபிள் ஒயர்களில் உள்ள கம்பிகள் உரசும்போது, அதன் வழியாக மின்சாரம் பாயும் அபாயமும், அந்த சமயங்களில் இணையதள இணைப்பை தொடுபவர்கள் மீது மின்சாரம் பாயும் அபாயமும் உள்ளது. இது போன்ற அபாயங்களை தவிர்க்க, மின் வாரிய அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் பல இடங்களில் இணையதள வயர்களை முறையாக எடுத்துச்செல்லாததால், இங்கும், அங்கும் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையை கீழக்கரை நகரிலும்,அதனை சுற்றியுள்ள பல இடங்களில் பார்க்க முடிகிறது. பல இடங்களில் பெரும்பாலும் மின் கம்பத்தில்  ஆக்கிரமித்துத்தான் தனியார் இணையதள வயர்கள்  கொண்டு செல்லப்படுவதாகவும் கூறுகின்றனர்,


இதனை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது, சாலைகளில் தொங்கியபடி கிடக்கும் வயர்களால்  வாகன ஓட்டிகளுக்கும், அவ்வழியை கடந்து செல்பவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்துகிறது, மேலும் பாதுகாப்பான முறையில் தனியாக கம்பங்கள் நட்டு இணையதள ஒயர்கள் கேபிள் இணைப்புகளை கொண்டு செல்ல வேண்டும், ஆங்காங்கே அலங்கோலமாக காட்சி அளிக்கும்  ஒயர்களை அப்புறப்படுத்த வழிவகை செய்ய வேண்டும்  மின்கம்பத்தில் கட்டப்படும்  தனியார் இணையதள வயர்கள் தொடர்பாக மாவட்ட மின் வாரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad