தாராபுரம் ஒன்றிய திமுக அலங்கியம் ஊராட்சி சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 31 மார்ச், 2025

தாராபுரம் ஒன்றிய திமுக அலங்கியம் ஊராட்சி சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது

IMG-20250331-WA0075

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றிய திமுக அலங்கியம் ஊராட்சி சார்பில் அலங்கியம் பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள மண்டபத்தில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியை அலங்கியம் இளைஞரணியை சேர்ந்த பரக்கத் அலி,மைசூர் சாதிக் பாட்சா, முகம்மது ரபீக்,ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.இந்நிகழ்ச்சி  தாராபுரம் ஒன்றிய திமுக செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஹைடெக் அன்பழகன், மீனவரணி அமைப்பாளர் தேவராஜ், நகரத் தொழில் பணி ஒருங்கிணைப்பாளர் முகமது முஹ்சீன்,ஆகியோர் கலந்து கொண்டனர் பின்பு சுபஹானியா அரபிக் கல்லூரியின் முதல்வர் ஷேக் பரீத் அவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு பிறகு நோன்பு திறக்கப்பட்டது.அங்கு வந்த சிறப்பு விருந்தினர்களுக்கு சமூக செயல்பாட்டாளர் ஜாபர் சாதிக் அவர்கள் இஸ்லாமிய புத்தகங்களை கொடுத்து வரவேற்றார். இந்நிகழ்வில் இஸ்லாமிய பொதுமக்கள் ஊர் பெரியவர்கள் என அனைத்து சமுதாய மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad