வங்கிகளின் வாடிக்கையாளர்களின் இருசக்கர வாகனங்களால் பொதுமக்கள் அவதி வங்கி நடவடிக்கை எடுக்குமா!
குடியாத்தம் , மார்ச் 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாழையாத்தம் பகுதியில் கனரா வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கிகள் செயல் படும் சாலை வழியாக பெரியார் நகர் கூட நகர் ரோடு காமாட்சி அம்மன் பேட்டை போஸ் பேட்டை ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்கள் இதை பிரதான சாலையாக பயன்படுத்தி வருகிறார்கள் தற்போது இப்பகுதியில் இரண்டு வங்கிகள் செயல்படுவதால் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய இருசக்கர வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு செல்கிறார்கள் இதனால் தினசரி அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது எனவே வங்கி மேலாளர்கள் வாடிக்கை யாளர்களின் இருசக்கர வாகனத்தை நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக