நீலகிரி மாவட்ட கூட்டுறவுத்துறையின் சார்பாக மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமையில் தவணை தவறிய கடன்களுக்கான, கடன் வசூல் பணி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் அருவங்காடு கிளை, ஜெகதளா தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம், ஜெடயலிங்கா தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் ஆகிய பகுதிகளுக்கு மண்டல இணைப்பதிவாளர் அவர்கள் நேரில் சென்று, பயிர்க்கடன், மகளிர் சுய உதவி குழு கடன், சிறு வணிகக் கடன், மத்திய கால கடன் ஆகியவற்றை பெற்று தவணை தேதிக்குள் திரும்ப செலுத்தாத உறுப்பினர்களிடம், தாங்கள் பெற்றுள்ள கடன்களை உரிய தவணை தேதிக்குள் கட்ட வேண்டும் எனவும், அவ்வாறு கட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், தவணை தேதிக்குள் திரும்ப செலுத்தாததன் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் சரக துணைப்பதிவாளர் திரு. இரா. மது, கூட்டுறவு சார்பதிவாளர் திரு. நிசார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர்கள், சரக மேற்பார்வையாளர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக செய்தியாளர் செரீஃப். M.A,.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக