சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 மார்ச், 2025

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

 

IMG-20250321-WA0436

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. 


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டக் குழு, யூத் ரெட் கிராஸ்,  டாக்டர் அழகப்பன் சயின்ஸ் சிட்டி லயன்ஸ் சங்கம் மற்றும் செங்கொடை பவுண்டேஷன் இணைந்து நடத்திய ரத்த தானம் முகாம் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் உமையாள் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி  தலைமை வகித்தார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சிவகங்கை மாவட்ட தலைவர் நல்லாசிரியர் சுந்தரராமன், லயன் சங்க மண்டல தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். டாக்டர் அழகப்பர் சயின்ஸ் சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவர் சிவா வரவேற்புரை ஆற்றினார். அழகப்பா பல்கலைக்கழகத்தின் யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் முனைவர் விநாயகமூர்த்தி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் மாவட்டச் செயலாளர் அனந்த கிருஷ்ணன், ரத்ததான ஒருங்கிணைப்பாளர் செங்கையா,  இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் துணைத் தலைவர் முத்துப்பாண்டியன் மற்றும் லயன்ஸ் சங்கத்தின் ரத்ததான ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் ரகுநாதன் செங்கொடை பவுண்டேசன் ஹரீஸ் வேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். லயன் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


இதில் 51 மாணவர்கள் கலந்து கொண்டு  ரத்த தானம் செய்தனர்.  அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர். சுந்தரி  முனைவர் தெய்வமணி  முனைவர்.செந்தில் குமார் மற்றும் முனைவர். லட்சுமண குமார்  மற்றும் யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாரதி ராணி ஆகியோர் இரத்ததான முகாமை ஒருங்கிணைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad