நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 8 மார்ச், 2025

நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை

IMG-20250307-WA0382

நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை


கன்னியாகுமரி பிரபல சுற்றுலா தளமாக விளங்கி வருவதால் தினந்தோறும் பல ஆயிரம் கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில்   கன்னியாகுமரி காவல் நிலையம் முதல் விவேகானந்தபுரம் ஜங்ஷன் வரையிலும் பொதுமக்கள் நடக்கக்கூடிய  பாதசாரிகளுக்கான நடை பாதையை பல உணவகங்கள் மற்றும்   ஆட்டோக்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். எனவே பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக ஆக்கிரமித்து வைத்துள்ள விளம்பரப் பலகைகள் சமையல் உபகரணங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தி தருமாறும்    பொது மக்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் இடையூறு இல்லாத பாதுகாப்பான போக்குவரத்தை ஏற்படுத்தி தருமாறும் நடைபாதை ஆக்கிரமிப்பாளர்களுக்கு கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறையினர் உத்தரவு விடுத்துள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad