திருமங்கலத்தில் ரோட்டரி கிளப் மதுரை இன்னோவேட்டர்ஸ் சார்பில் மாணவர்களுக்கு துவக்கி வைக்கப்பட்டது.
ரோட்டரி கிளப் மதுரை இன்னோவேட்டர்ஸ் சங்கம் சார்பாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,கப்பலூர், திருமங்கலத்தில் மாணவர்களுக்கான ரோட்டராக்ட் சங்கம் துவக்கி வைக்கப்பட்டது. இவ்விழாவில் ரோட்டராக்ட் தலைவர் Rtn. B. கண்ணதாசன்
வரவேற்புரையாற்றினார், கல்லூரி முதல்வர் க.லட்சுமி தலைமையுரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரியன் மேஜர் டோனர், கவர்னர், கலந்து கொண்டனர்.
A. வியோஃபெலிகளக்ஸ் அவர்கள் மாணவர்களுக்கு ஒழுக்கநெறிகளுடன்கூடிய சேவை மனப்பாண்மையை வளர்த்துக் கொள்வதின் அவசியம் மற்றும் மென்திறன்களை வளர்த்துக் கொள்வதின் வழியே சிறந்த தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள முடியும் என்று எடுத்தரைத்தார்.
ரோட்டராக்ட் சங்க உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பதவி ஏற்றனர். க.சு ஜான்சி, ரோட்டராக்ட் ஒருங்கிணைப்பாளர் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக