மாண்புமிகு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி, திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர், மத்திய மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம் எல் ஏ அவர்களின் தலைமையில் திமுகவினர்
பேராசிரியர் பெருந்தகை அவர்களது நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் இரயில் நிலையம் அருகில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர்களது சிலைகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் பெருந்தகையின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
அதனை தொடர்ந்து
வாட்டியெடுக்கும் கடும் கோடையிலிருந்து மக்களை பாதுகாத்திடும் வகையில், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மத்திய மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம் எல் ஏ
அவர்கள் திமுக நிர்வாகிகளுடன் திருப்பூர் மத்திய திமுக சார்பில் அருகில் அமைக்கப்பட்டிருந்த நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, நீர்மோர் மற்றும் பழங்களை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் உடன் பிறப்புகள் பொது மக்கள் பெருந் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக