மதுரையில் வணிக பயன்பாட்டு கேஸ் அடுப்பு தயாரிக்கும் தொழிற்கூடத்தில் தீ விபத்து:
துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்களால் பெரும் சேதம் தவிர்ப்பு.
மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 5ஆவது தெரு பகுதியில் ராஜா என்பவர் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் அடுப்புகள் (ஸ்டவ்) தயாரிக்கும் தொழிற் கூடம் வைத்துள்ளார்.
இந்த தொழிற்கூடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென தீ பரவியது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்
விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் அடுப்பு தயாரிக்க வைக்கப்பட்ட பொருட்கள் மற்றும் பெயிண்டுகள் தீயில் எரிந்து சேதமடைந்தது. இன்று விடுமுறை என்பதால் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
அதோடு அருகருகே குடியிருப்புகள் இருந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயணைத்தால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.
இந்த தீவிபத்து குறித்து செல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக