வாணியம்பாடி அருகே கணவன் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலைபோலீசார் விசாரணை.
வாணியம்பாடி,மார்ச்.30-
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட மிட்னாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி மதன்குமார் (வயது 22). இவர் அண்ணா நகர் பகுதி சேர்ந்த வெண்ணிலா(வயது 21) என்பருடன் காதல் திருமணம் செய்து கொண்டுள் ளனர் . இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. மதன்குமார் பெங்களூரில் வேலை செய்து வருகிறார் இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பணத்தை கேட்கும்போதெல்லாம் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப் படுகிறது. நேற்று முன்தினம் குடும்ப செலவுக்காக கணவனிடம் போனில் தொடர்பு கொண்டு பணத்தைக் கேட்டுள்ளார். இதனால் போனின் ஒருவருக்கொருவர் வாய் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வெண்ணிலா புடவையால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நீண்ட நேரமாக குழந்தை அழுகுரல் சத்தம் கேட்டதை தொடர்ந்து அவரது உறவினர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வெண்ணிலா தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார்.
இது குறித்து அம்பலூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத் துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்பலூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக வாணியம்பாடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணம் ஆகி இரண்டரை ஆண்டு மட்டும் ஆகியுள்ளதால் சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.வாணியம்பாடி அருகே கணவன் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததால் கணவனும் மனைவிக்கு இடையே தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாணியம்பாடி தாலுகா செய்தியாளர்
மஞ்சுநாத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக