இராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் மினி பேருந்துகள் இயக்குவதற்கு வரப்பெற்ற விண்ணப்பங்களுக்கு அரசானை (நிலை) எண் 33ன் (போவ-1) துறை நாள்: 23.01.2025 தேர்வு செய்து அனுமதி ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர், முன்னிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய வழிதடங்களில் மினி பேருந்துகள் இயக்குவதற்கான விண்ணப்பம் செய்த 40 விண்ணப்பதாரர்களுக்கு புதிய வழித்தடங்களில் 40 மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., வழங்கினார்.
மேலும் செயல்முறை ஆணை பெற்றவர்கள் 30.04.2025க்குள் அதன் சம்பந்தமான ஆவணங்களை சமர்ப்பித்து மினி பேருந்து அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சேக் முகமது, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார், ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக