விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. 8ம் நாள் திருவிழாவான இன்று திங்கட்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், உருகு சட்டசேவை நடந்தது.
பின்னர் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்களுக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பச்சை சாத்தி சேவை நடந்தது. சுவாமி சண்முகர் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி கோவில் உள்பிரகாரத்தில் கடைசல் சப்பரத்தில் உலா வந்தனர்.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன் தலைமையில் அறங்காவலர் குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் செய்துள்ளனர்.
தமிழர் குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக