நெல்லை தச்சநல்லூரில் நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர், முதல்வர் ஸ்டாலின் ஆகியோரது பிறந்த தின விழா பொதுக்கூட்டம் மாவட்ட பிரதிநிதி இசக்கிப்பாண்டியன் ஏற்பாட்டில் மாநில வர்தகர் அணி இணைச் செயலாளர் மாலைராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசுகையில் இந்திய துணை கண்டத்தின் வரலாற்றை தமிழக முதல்வர் காவிரி கரையில் இருந்து எழுத தொடங்கிவிட்டார்.,கேரளா,பஞ்சாப்,தெலுங்கானா முதல்வர்கள்,கர்நாடக துணை முதல்வர்,ஒடிசா முன்னாள் முதல்வர் ஆகியோருடன் தொகுதி மறுவரையறை எதிர்ப்பு கூட்டத்தை நடத்தி உள்ளார். மோடிக்கு முடிவுகட்டும் பணியை முதல்வர் தொடங்கியுள்ளார். இந்தியாவில் பாசிசம் நடைமுறையில் உள்ளது. எமர்ஜன்சி அமல்படுத்தியதை விட மிகப்பெரிய கொடுமை நடக்கிறது.இந்தியாவை நாங்களே ஆளவேண்டும் என பாசிஸ்ட்கள் நினைத்து கொண்டு எதிரிகளை அகற்ற நினைக்கின்றனர்.2026 தேர்தலை சந்திக்கும் வரை பிரச்சர யுத்தத்தை நடத்தவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இந்தியாவின் அனைத்து கட்சி தலைவர்களும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பாதை எங்கு செல்கிறது என்பதை பார்க்கின்றனர். நாடே ஏற்பதை தமிழகம் மட்டும் ஏற்கவில்லை என முன்னாள் ஆளுனர் தமிழிசை கேள்வி எழுப்புகின்றனர். சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ்குமாரும் போடும் யாசகத்தை வாங்கி ஆட்சி நடத்தும் பாஜக ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் தமிழக ஆட்சியை பறிக்க நினைக்கிறார்கள். பாராளுமன்ற மையமண்டபத்தில் நின்று கொண்டு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள் என கூறுகிறார், பண்பாடு,நாகரிகம் வரலாற்றை கொண்ட தமிழ் இனத்தை நாகரிகமற்றவர் என சொல்ல என்ன தகுதி உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பயன்படவேண்டிய 2542 கோடியை ஹிந்தி மொழியை மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் தருவேன் என சொல்வது அரச பயங்கரவாதம். ஒத்திசைவு பட்டியலில் இருக்கும் கல்வியில் மாற்றத்தை திணிக்க நினைக்கும் போது முதல்வர் , கல்வி அமைச்சர் ஆகியோரிடம் ஆலோசத்திற்க வேண்டும்.தமிழர்கள் அழகாக ஹிந்தி பேசுகிறார்கள் தமிழர்கள் நடத்தும் செங்கல் சூலைகள்,உணவகங்கள்,வயல்வெளிகளில் இந்திகாரர்கள் தான் வேலை செய்கிறார்கள் அவர்களிடத்தில் தமிழர்கள் யாரும் பகைமை பாரட்டவில்லை.மும்மொழி கொள்கை வேண்டாம் என அண்ணா காலத்திலேயே முடிவு எடுத்துவிட்டோம். ராஜாஜி 125 பள்ளிகளில் கட்டாய இந்தியை திணித்தார்.அதனை ஏற்க முடியாது என 1960 களில் அறிவித்து பெரியாரும்,அண்ணாவும் போராட்டம் நடத்தினார்கள். பலர் ஹிந்தியை ஏற்கமறுத்து உயிரை மாய்த்த வரலாறு தெரியாதவர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.ஹிந்தியை திணிக்க நினைத்தால் கீழபழுவூர் சின்னசாமியை போல் இன்னும் பலர் திக்குளிக்க தயாரவார்கள். மொழி என்பது முகம் அதில் உங்களது முகவரியை எழுத அனுமதிக்கமாட்டோம். சாதி,மதம் ஆகியவை மனிதனை ஒன்றிணைக்காது ஆனால் மொழி மனிதனை ஒன்றிணைக்கும்.மொழி என்றால் என்ன அதன் வரலாறு என்ன அமைச்சர் தர்மேந்திரபிரதான் தெரிந்துகொள்ள வேண்டும். பிரதமர்,உள்துறை அமைச்சர் ஆகியோரது தாய்மொழி குஜராத்தி ஆனால் அவர்கள் தாய்மொழியில் என்றும் பேசியது கிடையாது அவர்கள் ஹிந்தியில் தான் பேசுவார்கள்.இந்தியாவின் பிரதமர்,உள்துறை அமைச்சர் ஆகியோரை ஹிந்தி விழுங்கலாம் ஆனால் தமிழகத்தின் முதல்வரை ஹிந்தி விழுங்கமுடியாது. மும்மொழி பிரச்சனையில் தமிழகம் வென்றுவிட்டது. இந்தியாவின் காலடியில் கிடக்கும் தமிழகத்தை இமயம் ஆச்சர்யத்துடன் பார்க்கிறது. உலகிலேயே சிம்பொனியை இசைக்கும் மிகப்பெரிய ஆற்றலை கொண்ட தமிழன் இளையராஜா அவர் ஹிந்தி கற்றவர் கிடையாது.ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் வென்ற ஏ.ஆர் ரஹ்மான் ஹிந்தி படித்தது கிடையாது.விண்வெளியில் முகாமிட்டு பூமியை புரட்டிய சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் வித்தைபுரிந்த சிவன்,மயில்சாமி அண்ணாதுரை,அப்துல் கலாம் போன்றோர் ஹிந்தி படித்தது கிடையாது. உங்களிடம் அதிகாரம் உள்ளது எங்களிடம் கொள்கை உள்ளது. அதிகாரத்தை விட கொள்கை உயர்ந்தது என்பதை சமகாலத்தில் திமுக நிரூபித்துவிட்டது.டெல்லியின் அதிகாரங்களை நொறுக்கிவிட திமுகவின் படைகலன்களாக திமுகவின் எம்.பிகள் உள்ளனர். டிசம்பர் முதல் மத்திய அரசின் கடிதங்கள் அனைத்தும் தாய்மொழியில் தான் இருக்கவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா சொன்னது மூலம் நாங்கள் இன்று நடத்திய கூட்டத்திற்கு நேற்றே வெற்றி கிடைத்துவிட்டது. தொகுதிகள் மறுசீரமைப்பு செய்து தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டால் மத்திய பிரதேசம்,உத்திரபிரதேசம் போன்ற இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிடலாம் என எண்ணுகிறார்கள். தமிழர்களின் மொழி,உணவு,உடை, கலாச்சாரம் போன்றவை மாற்றம் கொண்டது. தமிழகத்தில் நெல்லையில் பெருமழை வெள்ளம் பெய்தது எங்கள் முதல்வர் கேட்ட நிதியை கொடுத்தீர்களா இல்லை.குஜராத்தில் புயல் பாதித்த போது தனி விமானத்தில் சென்று பார்த்து குஜராத் மக்களுக்கு ₹2000 வங்கி கணக்கில் வரவு வைத்தார் பிரதமர் மோடி , தனி திராவிட நாடு கேட்டவர் அண்ணா.இந்தியா சைனா போர் வந்தபோது நேரு கேட்டுகொண்டதால் அந்த கோரிக்கை கைவிடபட்டது. அப்பேற்பட்ட தமிழர்களை அர்பன் நக்சலைட் என சொல்வதா?.வாஜ்பாயின் ஆட்சியை ஒரு ஓட்டில் கவிழ்த்தவர் ஜெயலலிதா.மீண்டும் வாஜ்பாய்க்கு ஆதரவு கொடுத்து அவரை அரியணை ஏறவைத்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர் எந்த வகையில் தமிழகம் மத்திய அரசுக்கு ஒத்துழைக்கவில்லை. தொகுதி மறு சீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் செய்தால் பீகார்,உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை இரட்டிப்பாகவும் தமிகத்தின் எண்ணிக்கை குறையவும் வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தின் பல்லை பிடிங்க நினைத்தால் நாங்கள் விடமாட்டோம்.மரணத்தில் முத்தாமிட்டலும், யாரிடமும் மண்டியிட மாட்டோம் நாங்கள் எங்கள் கொள்கையில் ஒருபோதும் சமரசம்
செய்துகொள்ள மாட்டோம் என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், மூத்த நிர்வாகி சுப.சீத்தாராமன், மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் விஜிலாசத்தியானந்த், மாவட்ட துணை செயலாளர் சுரேஷ், பகுதி செயலாளர் சுப்பிரமணியன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கோட்டையப்பன் கருப்பசாமி, மாநகராட்சி மண்டல தலைவர்கள் மகேஷ்வரி, ரேவதி பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி - மாடசாமி, திருநெல்வேலி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக