மானாமதுரை மற்றும் இளையான்குடியில் கர்ப்பிணிகளுக்கான "சமூக வளைகாப்பு நிகழ்ச்சி" சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 13 மார்ச், 2025

மானாமதுரை மற்றும் இளையான்குடியில் கர்ப்பிணிகளுக்கான "சமூக வளைகாப்பு நிகழ்ச்சி" சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது.

IMG-20250313-WA0013

மானாமதுரை மற்றும் இளையான்குடியில் கர்ப்பிணிகளுக்கான "சமூக வளைகாப்பு நிகழ்ச்சி" சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது. 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மானாமதுரை மற்றும் இளையான்குடி ஆகிய பகுதிகளில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திட்டமான "சமுதாய வளைகாப்பு" நிகழ்ச்சி மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. 


இந்நிகழ்வில் நகர் கழகச் செயலாளர் க. பொன்னுச்சாமி, கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் துரை. ராஜாமணி, மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அண்ணாதுரை, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் லதா, நகர் மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம், வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அமுதா மற்றும் ஜெயசுதா, மானாமதுரை வட்டார மருத்துவர் செல்வ லத்திகா, அங்கன்வாடி பணியாளர்கள், திமுக கட்சி நிர்வாகிகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad