மதுரை ஜல்லிக்கட்டு காளைமுட்டியதில் மாடுபிடி வீரரான பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு.
மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி மேலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளும் 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர் ஜல்லிக்கட்டு போட்டியில் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சி கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் பாண்டி வயது 25 எம் காம் பட்டதாரி மாடுபிடி வீரர் ஜல்லிக்கட்டில் மாடு பிடித்த போது இடது நெஞ்சில் மாடு குத்தியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார் ஜல்லிக்கட்டு போட்டியில் பட்டதாரி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக