மகளிர் நலன் காக்கும் சங்கம் மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து வழங்கும் இலவச கண் சிகிச்சை முகாம்
பொது மகளீர் நலன் காக்கும் சங்கம் மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை உதகை இணைந்து இன்று (05/03/2025) புதன் கிழமை நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் இந்த முகாமில் கண்புரை,கண் விழி பிரச்சினைகள்,கண் பார்வை மங்குதல், தலைவலி மற்றும் தூரப்பார்வை,கிட்ட பார்வை போன்றவற்றிக்கு சிகிச்சைக்கான ஆலோசனைகள் அறிவுறுத்தபட்டது அதில் கண் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு முகாம் மூலம் இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் இணைந்து ஒத்துழைத்த தி ஐ ஃபவுண்டேஷன் குழுவிற்கு பொது மகளீர் நலன் காக்கும் சங்க உறுப்பினர்களின் மற்றும் பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்து கொண்டனர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத் குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக