சிறுத்தைப் புலியின் அட்டகாசம் அச்சத்தில் ஊர் பொதுமக்கள் நடவடிக்கை எடுப்பார்களா வனத்துறையினர்
நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட எமரால்டு அருகில் உள்ள நேரு நகர் பகுதியில் நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் அப்பகுதியில் வசித்து வரும் K.P சாமி செல்வன் அவர்களின் வளர்ப்பு நாயை சிறுத்தை புலி வீட்டு வாசலில் வைத்து கொன்று இழுத்துச் சென்று விட்டது இது மட்டுமல்லாமல் இதற்கு முன் சுமார் 20க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களை சிறுத்தை புலி இந்த பகுதியில் இருந்து வேட்டையாடி சென்றுள்ளது. இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மாவட்ட வனத்துரை உயர் அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அப்பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளதால் மனித உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன் கூண்டு வைத்து சிறுத்தை புலியை பிடித்து அடர்ந்த வனப் பகுதியில் விடுமாறு அப்பகுதி ஊர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக