பட்டீஸ்வரம் கோவிலில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி
தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 57வது பிறந்த நாளை முன்னிட்டு அருள்மிகு பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் ஆலயத்தில் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் கும்பகோணம் மாநகர செயலாளர் நந்தகுமார் தலைமையில் முன்னாள் மாநகர பொருளாளர் ஐயப்பன், முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் நத்தம் மதியழகன், சோழன்மாளிகை செயலாளர் தர்மராஜ், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் வெங்கடேஷ், பட்டீஸ்வரம் ஊராட்சிக் கழக செயலாளர் கார்த்திக், சோழன்மாளிகை அரவிந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக