திருநெல்வேலி - இப்தார் எனும் மத நல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

செவ்வாய், 25 மார்ச், 2025

திருநெல்வேலி - இப்தார் எனும் மத நல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி.

இப்தார் எனும் மத நல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி.

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் திருநெல்வேலி வழக்கறிஞர் சங்கம் சார்பாக மத நல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது 

நிகழ்ச்சிக்கு வக்கீல்கள் சங்கத் தலைவர் ராஜேஷ்வரன் தலைமை வகித்தார் செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.வக்கீல் ஜாகிர் உசேன் வரவேற்றார். முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி சாய் சரவணன் மூத்த வக்கீல் அகமது ஹசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

1வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பத்மநாபன், இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி முரளிதரன், நான்காவது கூடுதல் மாவட்ட நீதிபதி மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ராபின்ஸ் ஜார்ஜ், போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், வழக்கறிஞர் சங்கப் பொருளாளர் ராஜா, வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் வழக்கறிஞர் மோகன்ராஜ் வழக்கறிஞர் முஹம்மது உசேன் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கி பேசினர்.

வக்கீல் சங்க செயற்குழு உறுப்பினர் அஹமதுநன்றி கூறினார். காதர் வழக்கறிஞர் மதார் முகைதீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நிகழ்வில் அரசு வழக்கறிஞர்கள் கந்தசாமி, சூரசங்கரவேல், மூத்த வழக்கறிஞர் ஜாபர் அலி,மசூது அலி ,சல்மான் பாதுஷா,முகமது நயினார்,கரீம், கயத்தாறு பாதுஷா,முஹம்மது தவ்ஃபீக்,ஜிப்ரில், அப்துல்லா ,முஜாஹித்,ஆரிப் பாஷா,முகம்மது சலீம்,ஹனிபா ,யாசர் அரஃபாத் ,முஹம்மது கோதர்,பாட்சா,செய்யது உசேன், ரமேஷ், குமார்,சிதம்பரம்,இசக்கி,
அசாருதீன், கான்சாகிப், முகம்மது அனிபா ,முகம்மது ஆசிப்,நைனா முஹம்மது,காஜா சைபுதீன், மன்சூர் அலி, முத்துக்குமார், பாசித் உட்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திமுக சட்டத்துறை துணைச் செயலாளர் வழக்கறிஞர் ராஜா முஹம்மது, வழக்கறிஞர் ஞானியார் , வழக்கறிஞர் அலிப் மீரான்,வழக்கறிஞர் காசிம்,வழக்கறிஞர் அல்பி நிஜாம் மற்றும் சித்திக், வழக்கறிஞர் முஸ்தபா, ஆகியோர் இஸ்லாமிய வழக்கறிஞர்களுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad