பாஜக மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்புகள் அறிவிக்கும் கூட்டம்!
ராணிப்பேட்டை, மார்ச் 22-
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்புகள் அறிவிக்கும் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு 50க்கும் மேற்பட்ட பாஜக உறுப்பினர்கள் பங்கேற்றனர் அவர்களுக்கு பொறுப்பு அறிவித்து ஒவ்வொருவரும் அவர்களை அறிமுகப்படுத்திகொண்டனர்.2026 ஆம் ஆண்டு பாஜகவிற்கு மகத்தான வெற்றியை தேடி கொடுக்க வேண்டும் என்றும் தேர்தல் காலத்தில் நீங்கள் அனைவரும் உங்கள் பகுதியில் ஒரு வார்டு உறுப்பினராக அல்லது ஒரு ஊராட்சி மன்ற தலைவராகவோ நின்று வெற்றி பெற்று மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நீங்கள் செய்து தர வேண்டும்.
தேர்தல் காலத்தில் நீங்கள் உறுப்பினராக நிற்கும் ஒன்று மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் மகத்தான வளர்ச்சி அடையும் என்று கூட்டத்தில் கலந்துரையாடினார்கள் இறுதியாக உறுதிமொழியினைஏற்றுக் கொண்டனர் இந்த நிகழ்ச்சியானது மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. வேலூர் கோட்டை அமைப்புச் செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர் ஜே சுரேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக