பாலாடையில் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் படத்தை வரைந்து அசத்திய மானாமதுரை இளைஞர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கன்னார் தெருவை சேர்ந்த வரைபட கலைஞர் திரு கார்த்தி என்பவர் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து நீண்ட நாட்களுக்கு பின் பூமி திரும்பிய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அவர்களை வரவேற்கும் விதமாக பால் ஆடையில் சுனிதா வில்லியம்ஸின் படத்தை மிகப் தத்துவமாக வரைந்து அசத்தியுள்ளார். பல தத்துரூப மற்றும் வினோத வரைபடங்களை வரைந்து அசத்தி வரும் கார்த்திக்கு சமூக வலைத்தளங்கள் மற்றும் பொதுமக்கள் கார்த்தியின் தனித்திறமையை ஊக்கப்படுத்தும் விதமாக தங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர். கார்த்தி சமீபத்தில் பாலாடையில் தமிழ் கடவுள் முருகனின் படம் வரைந்து அசத்தியது குறிப்பிடத்தக்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக