நியாயவிலைக் கடையை சூறையாடிய காட்டு யானை
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தொரப்பள்ளி பகுதியில் அதிகாலை நேரத்தில் காட்டு யானை ஒன்று அங்கிருந்த நியாய விலை கடையை சூறையாடி அரிசி, கோதுமை, ஆகியவற்றை சாப்பிட்டு சென்றுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது காட்டு யானைகள் சர்வ சாதாரணமாக பகல் நேரங்களிலும் இந்தப் பகுதியில் சுற்றிவருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது சம்பந்தப்பட்ட வனத்துறை நிர்வாகம் காட்டு விலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக