வழக்கறிஞர் டெல்லி முரளிதரன் தாய் மகன் பிறந்தநாள் விழா முன்னிட்டு பெங்களூர் ராஜேஷ் தலைமையில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட விழா!
காட்பாடி , மார்ச் 9 -
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கிருஸ்ட்டியான்பேட்டை, கிருஸ்துவ பள்ளி வளாக மைதானத்தில், காட்பாடியை சேர்ந்த டெல்லி. முரளிதரனின் பிறந்தநாளான மார்ச் 8 ஆம் தேதி டெல்லி எம்.முரளிதரன் மற்றும் அவர்களின் அம்மாவின் பிறந்தநாளும், இருவரின் பிறந்தநாளும் ஒரே தேதியான சிறப்புமிகு இனிய நன்னாளான, இவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கர்நாடகா மாநிலம், பெங்களூரை சேர்ந்த சமூக சேவகர் அமைப்பின் தலைவர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் ராஜேஷ் குழுவினர் ஜெயகுமார், நம்பிக்கைராஜ், பரத் மற்றும் சமூக ஆர்வலர் குழுவினர்களுடன், கிருஷ்டியான்பேட்டை பகுதி மக்களுக்கு சுமார் 200 நபர்களுக்கு உணவுப் பொருட்கள், புடவைகள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், பள்ளி புத்தகப்பை மற்றும் மரக்கன்றுகள் வழங்கி, இவ்விழாவை விமெர்சையாக சிறப்பித்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக