அம்மாபேட்டை அருகே மலை தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி சாவு : - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 30 மார்ச், 2025

அம்மாபேட்டை அருகே மலை தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி சாவு :

IMG-20250329-WA0244

சேலம் மாவட்டம், கோனேரிப்பட்டி அருகே உள்ள பூமணியூரை சேர்ந்தவர் முத்துசாமி (57). தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (43). கோனேரிப்பட்டியில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள மீன்கடை ஒன்றில் முத்துசாமி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், அவர் ஈரோடு மாவட்டம், மேட்டூர் ரோட்டில் உள்ள மதுபான கடையின் பாரில் நேற்று அவரது நண்பருடன் மது அருந்தச் சென்றார். அவர்கள் மது குடித்துக் கொண்டிருந்தபோது திடீரென சூழ்ந்த மலைத்தேனீக்கள் கொட்டியதில் முத்துசாமி மயக்கமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே முத்துசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம.குமார், பவானி தாலுகா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad