கன்னேரி மந்தணை, நீலகிரி பள்ளியின் ஆண்டுவிழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

ஞாயிறு, 23 மார்ச், 2025

கன்னேரி மந்தணை, நீலகிரி பள்ளியின் ஆண்டுவிழா

AddText_03-23-07.43.41

நீலகிரி மாவட்டம் கண்ணேரி மந்தனை அரசு பள்ளியில் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது பள்ளியில் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார் இருபால் ஆசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் ஊர் தலைவர்களும் ஊர் பொது மக்களும் பெற்றோர்களும் திருமதி சபிதா போஜன் அவர்களும் கலந்து கொண்டார்கள் 


தனியார் பள்ளிகளுக்கு இணையாக என சொல்வதைவிட அதைவிட ஒருநிலை மேல் தரம் உயர்த்தப்பட்ட பள்ளி என்பதனை உணரமுடிகிறது. விளையாட்டு, தனி திறன், சொல்லாடல், கல்வி என அத்தனையிலும் முத்திரை பதித்துள்ளது. திறமையான மாணவர்களை காணும்போது சொல்லிலடங்கா ஓர் நம்பிக்கை பிறந்ததை உணர்கிறேன்.


மிக குறைந்த எண்ணிக்கையை கொண்ட பள்ளி என இதனை மூட அரசு ஆயத்தமான போது, 1958ல் உருவாகி, பல மேதைகளை சமூகத்திற்கு அளித்த இந்த பள்ளியை மூடக்கூடாது என இதில் படித்து சமூகத்தில் முத்திரை பதித்த முன்னாள் மாணவர்கள் நான்கு ஊர் சமூக குழு என ஒரு அமைப்பை நிறுவி, இந்த பள்ளியினை PTA மூலம் அதிக சிரமம் எடுத்து இந்நிலையில் பராம்பரித்து வருகின்றனர். அதில் ஒருவர் எனது மாமா Dr.ராதாகிருஷ்ணன். திருமணம்கூட செய்துகொள்ளாமல், நகரத்திற்கு நகராமல், ஊரக மக்களுக்கு மருத்துவம் பார்ப்பதில் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். இவர் உட்பட பல நல்ல உள்ளங்களின் முயற்சியில் வருங்கால சிற்பிகள் இங்கே உருவாகி கொண்டிருக்கிறார்கள். 


இந்த பள்ளி மேலும் மெருகேரி பல சாதனையாளர்களை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. தனியார் பள்ளிகளை தவிர்த்து இதுபோல் தரம்பெற்ற அரசு பள்ளிகளுக்கு நம் பிள்ளைகளை சேர்த்து, கல்வி சுமையிலிருந்து கஷ்டப்படும் பெற்றோர் விடுபட்டால் நன்மையே.


விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் இருபால் ஆசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் பாஜக நிர்வாகி திருமதி சபிதா போஜன் அவர்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செயலாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad