ராணிப்பேட்டை , மார்ச் 8
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர்கள்.கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்
அதனைத் தொடர்ந்து மாவட்டசெயலாளர் பூக்கடை ஜி. மோகன் தனது மழலை பேச்சை தொடங்கினார் அவர் பேசும்போது ஆற்காடு நகர போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பல கட்டுப் பாடுகளையும் நெருக்கடிகளையும் கொடுத்தனர்
ஆளும் கட்சியான திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை ஆனால் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் வேலுநாச்சியார், அஞ்சலையம்மாவின் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு பெண்களுக்கு முன்னுரிமை, பாதுகாப்பு,
சமஉரிமை கொடுத்து வருகின்றது
தற்போது தமிழகத்தில் மது கஞ்சா, பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது இந்த குற்ற செயல்களை முற்றிலும் ஒழிப்பதற்கு திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
தமிழகத்தில் எந்த செய்தி சேனலை பார்த்தாலும் தளபதி பற்றி தான் செய்தி வெளியாகிறது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளில் தளபதி தான் ஹீரோவாக பேசப்பட்டார் இப்போது திமுகவுக்கும் தவெககட்சிக்கும் தான் போட்டி வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் இதனை
யாராலும் தடுத்த முடியாது என்று பேசினார்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக