மானாமதுரையில் மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி முன்பாக சிவகங்கை மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள், முன்னாள் அமைச்சர் மாநில இலக்கிய அணி புறவலர் திரு மு. தென்னவன் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இப்பொதுக்கூட்டமானது மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் நாகனி, கே. எம். பொற்கோ மற்றும் பி. செந்தில் ஆகியோரின் முன்னிலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை கண்டித்தும், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும் மற்றும் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டில் அநீதி விளைவிக்கும் பாசிச பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் கண்டன உறைகள் நிகழ்த்தப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன், நகர் கழக செயளாலர் க. பொன்னுசாமி, நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம், மாவட்ட, ஒன்றிய, நகர, வட்டம், பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த இளைஞர் அணியினர், மகளிர் அணியினர் மற்றும் அனைத்து பிரிவுகளை சேர்ந்த சார்பு அணியினர், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக