மழையின் காரணமாக ஊட்டி கமர்சியல் சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் அனைத்து தரப்பினரும்அவதி
நீலகிரி மாவட்டத்திலும் கடந்த 2 மாதத்திற்கு மேலாக பகலில் கடும் வெயிலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிரும் நிலவி வந்தது.இந்த நிலையில் நேற்று மாலை மற்றும் இன்றுமாலை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
இதன் காரணமாக அங்குள்ள முக்கிய சாலைகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. ஊட்டியில் உள்ள கமர்சியல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.இந்த நிலையில் மழையின் காரணமாக கழிவ நீர்கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக ஊட்டி கமர்சியல் சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் முகம் சுளித்த வாரே நடந்து செல்வதை காணமுடிகிறது.
நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீர்செய்ய வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத் குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக