ஒரு சதுப்பு நிலம் குப்பைத் தொட்டி ஆகிறது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 மார்ச், 2025

ஒரு சதுப்பு நிலம் குப்பைத் தொட்டி ஆகிறது.

 

IMG-20250327-WA0471

ஒரு சதுப்பு நிலம்  குப்பைத் தொட்டி ஆகிறது.


 கோத்தகிரி அருகே உள்ள ரைபிள் ரேஞ்ச் சதுப்பு நிலம் கோத்தகிரி நகரின் முக்கிய நீர் ஆதாரம். நகரின் குடி நீர் தேவையில் பாதி அளவை பூர்த்தி செய்யும் இந்த சதுப்பு நிலம் தற்போது கட்டிடக்கழிவுகளாலும் ஆக்கிரமிப்புகளாலும் சீரழிந்து வருகிறது. தமிழக அரசு இத்தகைய சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்காக ஒரு வாரியம் ஒன்றை அமைத்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்பு உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு மனுக்கள் அனுப்பப்பட்டும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது இந்த சதுப்பு நிலத்தில் கட்டிடக்கழிவுகள் மலை மலையாக குவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் காரணமாக வருங்காலத்தில் மிகப்பெரிய அளவில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்  இதுபோன்ற சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று உலக அளவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு சதுப்பு நிலத்தில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் சதுப்பு நிலங்களை காக்க வேண்டுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என இந்த சதுப்பு நிலத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக அரசின் கிரீன் சாம்பியன் அவார்டு பெற்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் கே ஜே ராஜு அவர்கள் கூறுகிறார். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad