நீலகிரி மாவட்டம் பொக்காபூர் மாரியம்மன் தேர் திருவிழா - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 10 மார்ச், 2025

நீலகிரி மாவட்டம் பொக்காபூர் மாரியம்மன் தேர் திருவிழா

 

Screenshot_2025-03-10-17-42-02-31_6012fa4d4ddec268fc5c7112cbb265e7

நீலகிரி மாவட்டம் பொக்காபூர் மாரியம்மன் தேர் திருவிழா இன்று வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது.       நீலகிரி மாவட்டம் மசனகுடி அருகில் உள்ள சூலூர் பேரூராட்சிக்கு சேர்ந்த பொக்காப்பூர் மாரியம்மன் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர் இன்று மாலை தேர்  திருவிழா நடைபெறுவதால் கேரளா கர்நாடகா தமிழ்நாடு சேர்ந்த ஏராளமான  மக்கள் அம்மனை வழிபடுவதற்காக இங்கு கூடுகின்றனர் இன்று கோவிலில் பொது மக்களுக்கு அன்னதானமும்  வழங்கப்பட்டது திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஏராளமான காவலர்களும் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் அவசர தேவைக்காக மருத்துவக் குழுவினரும் தீயணைப்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர் 


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad