ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது குறைகள், பிரச்சனைகள் குறித்த மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.
அப்போது சென்னிமலை ஒன்றியம், முருங்கத்தொழுவு ஊராட்சி, ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிரப்பதாவது:- நாங்கள் மேற்கண்ட காலனியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இறந்தவர்களை பழைய பாளையத்தில் இருந்து தலவுமலை செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் அடக்கம் செய்து வந்தோம். ஆனால் தற்போது அந்த இடத்தின் அருகே உள்ள பட்டா நிலத்தின் உரிமையாளர் அவருடைய அளவுப்படி தடுப்புச்சுவர் அமைத்து விட்டார்.
இனிமேல் எங்கள் ஊரில் இறப்பு ஏற்படும் சமயத்தில் உடலை அடக்கம் செய்ய எவ்வித வழியும் இல்லை. எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு ஒரு இடத்தை தேர்வு செய்து எங்களுக்கு மயான வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம. சந்தானம், ஈரோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக