பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வுநாள் கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 14 மார்ச், 2025

பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வுநாள் கூட்டம்!


குடியாத்தம் , மார்ச் 14 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா தலைமை தாங்கினார்
சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கலைவாணி முன்னிலை வகித்தார் 
மண்டல துணை வட்டாட்சியர் குமார் வரவேற்புரை ஆற்றினார் இதில் மருத்துவ துறை மருத்துவர் சதீஷ் 
கிழக்கே வருவாய் ஆய்வாளர் அசோக் குமார் தலைமை அளவைர் சுரேஷ்பாபு 
உதவியாளர் எழிலரசி மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் சம்பத் நாயுடு சாமிநாதன் துரைசெல்வம் சேகர் பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

விவசாய சங்க பிரதிநிதிகள் 
கோரிக்கைகள்

01.வனவிலங்கு பிர்ச்சனை இன்று விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

இதில் விவசாயிகள் கடன் வாங்கி, நகைகள் அடகு வைத்து, பயிர் செய்தால், அவனுக்கு மிஞ்சுவது கை காலும் தான் . ஒரு புறம் தண்ணீர், மறுபுறம் விளைச்சல் பாதிப்பு . அதற்கு மேல் வனவிலங்குகளால் பயிர் சேதம் இதற்கு மத்தியில்தான் விவசாயி வாழ்கிறான்.என்பதை உணர்ந்து அவர்களுக்கு வனவிலங்குகளால் பயிர் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வருவாய் துறை மற்றும் வனத்தையும் சேர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் 
கோடை காலம் வருவதால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் உணவுகள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

02.மோர்தானா அணையிலிருந்து இடதுபுறம் கால்வாய் சீர் செய்து செப்பனிடபட்டது போல் வலது புறம் கால்வாயையும் நிதி ஒதுக்கீடு செய்து சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

03.விவசாயக் கூட்டுறவு சொசைட்டிகளில் விவசாயிகளை உரிய முறையில் அதில் செயல்படும் அலுவலர் நடத்துவதில்லை முறை கேடாக செயல் படுகிறார்கள்.விவசாயிகளுக்கு தேவையான உரம் வழங்குவதில்லை. தினித்து செயல்படுத்துகிறார்கள் இதனை தடுத்து  உரிய முறையில் விவசாயிகளுக்கு இடுபொருள் கிடைத்திட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

04.குடியாத்தம் நகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் வருவதை தடுக்க வேண்டும்.இதனால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க உதவும்.

04.குடியாத்தம் நகரில் உள்ள கோழிக்கறி கடைகளின் உரிமையாளர்கள் தங்கள் கடைகளின் கோழி கழிவுகளை கிராமப்புற எல்லை பகுதியில் கொட்டி விட்டு செல்கின்றனர்.இதனால்நாய்கள் பன்றிகள்  குரங்குகள் தொல்லைகள் அதிகமாக உள்ளது.கிராம பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதை தடுக்க முனிசிபல் நிர்வாகம் கோழிக்கறி கடைகள் உரிமையாளர்களை அழைத்து பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

05.தற்போது 100. நாள் வேலை தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளமும் இல்லை, வேலையும் இல்லை. அவர்கள் எப்படி வாழ்வார்கள்.
அவர்களுக்கு ஏரி, குளம், கால்வாய்கள், தூர் வருவதற்கு 100.நாள் வேலை தொழிலாளர்களை பயன்படுத்த வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

06.மேலாளத்தூர்,  செட்டி குப்பம் கிராம பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்கள் இறந்தால் பினத்தைப புதைக்க இடம் இல்லை.அவர்களுக்கு  அப்பகுதி மக்களின் நலன் கருதி உடனடியாக சுடுகாடு ஏற்படுத்தி தர  உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

07.கோடைக்காலம் என்பதால் மின் நிறுத்தம் அடிக்கடி ஏற்படுகிறது.இதனால் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக வளத்தூர் சிங்கல்பாடி பார்வதியாபுரம் 
கூட நகரம் அனங்காநல்லூர் மோட்டூர் உள்ளி. ஆகிய பகுதிகளில் அடிக்கடி அறிவிப்பு இல்லாமல் மின் நிறுத்தம் ஏற்படுகிறது  இதனை தடுத்து தொடர் மின்சாரம் வழங்க வேண்டும் என லைன்ஸ் சங்க மூலமாக சங்க மனு கொடுக்கப்பட்டது மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மனு கொடுத்து.பேசினார்கள் மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad