பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது தவறி விழுந்து பெயிண்டர் பலி!
குடியாத்தம் , மார்ச் 27 -
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் நெல்லூர்பேட்டை மதுரா வாணிய படியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் த/பெ. சண்முகம் என்பவரின் வீட்டிற்கு சுண்ணாம்பு அடிப்பதற்காக சீவூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் வயது சுமார் 52 என்பவர் 27.03.2025 வேலைக்கு வந்த போது இன்று மதியம் சுமார் 11.30 மணி அளவில் சுண்ணாம்பு அடித்துக் கொண்டிருக்கும் போது தடுமாறி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு மேற்படி நபர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் இது சம்பந் தமாக குடியாத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இறந்த பிரபாகரன் என்பவரின் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார் என்று குறிப்பிடத்தக்கது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக