திருச்செந்தூர் அருகே பிச்சிவிளை, ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் பங்குனி கொடை விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 மார்ச், 2025

திருச்செந்தூர் அருகே பிச்சிவிளை, ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் பங்குனி கொடை விழா.

திருச்செந்தூர் அருகே பிச்சிவிளை, ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் பங்குனி கொடை விழா.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் பிச்சிவிளையில் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் கொடைவிழா நடைபெறும். 

அதன் படி பங்குனி திருமால் பூஜை ஒரு நாள் கொடை விழா சிறப்பாக இன்று நடைபெற்றது. விழாவையொட்டி இன்று மதியம் சுவாமிக்கு மஞ்சள் நீராடுதல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமி பூக்கும்பம் எடுத்து வீதி உலா வந்தது. 

மாலை 5 மணிக்கு படைக்கஞ்சி படைத்தல், இரவு 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீப ஆராதனை பூஜை, நள்ளிரவு ஒரு மணிக்கு அம்மன் சுவாமி பூக்கரகம் எடுத்து வீதி உலா வருகிறது. புதன்கிழமை காலை உணவு பிரித்தலுடன் விழா நிறைவடைகிறது. 

இதற்கான ஏற்பாடுகளை விழா விழா கமிட்டியினர் சிறப்பாக செய்துள்ளனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad