கமிட்டி சார்பில் உண்ணாவிரதம் பங்குத் தந்தையர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கிறிஸ்தவ மக்களால் ஆண்டுதோறும் சாம்பல் புதன் அன்று தவக்காலம் தொடங்கி 40 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தவக்காலத்தில் பலர் அசைவம் தவிர்த்து விரதம் இருப்பர். இதனிடையே தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் புனித வெள்ளிக்கிழமை அன்று மூட வேண்டும் என மதுவிலக்கு சபையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணத்தில் ஊர் நலக்கமிட்டி மற்றும் கப்பல் மாலுமிகள் சங்கம் சார்பில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு சபைனர் இயக்குனர் அருட்தந்தை ஜெயந்தன், வீரபாண்டியன்பட்டணம் பங்குத்தந்தை அலாசியுஸ், சிலுவை டிமெஸ், ஏரல் ரவீந்திரன் பர்னாண்டோ, புன்னைகாயல் டைட்டஸ், ஜீவாநகர் இருதயராஜ், கொம்புத்துறை பிரதிஸ் காட்டார், அமலிநகர் வில்லியம் சந்தானம், மணப்பாட ஜெயகர், ஆறுமுகநேரி வளன், பழைய காயல் ராஜேஷ், ஆலந்தலை சில்வெஸ்டர்,
ஊர்நலக்கமிட்டி தலைவர்கள் அமலிநகர் செல்வராஜ், ஆலந்தலை ஆசைத்தம்பி, ஜீவாநகர் ஜெயசிங், கொம்புத்துறை பிரான்சிஸ், சிங்கித்துறை மனுவேல், பழைய காயல் ஆரேக்கியராஜ், மணப்பாடு யாகப்பர் ஆலய கமிட்டி கபிரியேல், மற்றும் வீரபாண்டியன்பட்டணம் கப்பல் மாலுமிகள் சங்கத்தினர், துறைமுக கமிட்டியினர் உள்பட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக