சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியும் காரைக்குடி சட்டப்பணி குழு இணைந்து நடத்திய போதை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் போதைப்பொருள் ஒழிப்புக் குழு மற்றும் காரைக்குடி வட்ட சட்டப் பணிக் குழுவும் இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமியின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் நிலோபர் பேகம் மற்றும் கணினி அறிவியல் துறைத் தலைவர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். காரைக்குடி வட்ட சட்டப் பணிக் குழு சார்பாக வழக்கறிஞர் சேதுராமன் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து சிறப்புரையாற்றினார். விழாவில் வரலாற்றுத் துறைப் பேராசிரியர்கள் முனைவர் குணசேகரன் முனைவர் வேலாயுதராஜா மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக