திருமங்கலத்தில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வியாழன், 20 மார்ச், 2025

திருமங்கலத்தில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா

 

IMG_20250320_082219_031

திருமங்கலத்தில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா கொண்டாட்டம்.




மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா  கொண்டாட்டம்.  இவ்விழாவில்
முனைவர் பா.சிங்காரவேலன்  இணைப்பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர் வரவேற்புரையாற்றினார்
கல்லூரி முதல்வர் முனைவர் க. லட்சுமி  தலைமையுரையாற்றினார்.
முனைவர் பா. பிரதீப்குமார் உடற்கல்வி இயக்குநர் விளையாட்டுத்துறை ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக      G.பெத்துராஜ் M.Sc.,BEd., காவல் உதவி ஆணையர்  நுண்ணறிவு பிரிவு,மதுரை. கலந்து கொண்டு அதிகாலை துயிலெழுவதின் அவசியத்தையும்,உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும், கல்வியின் மேன்மையையும் அது தரும் உயரங்களையும், பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பில் காவலன் செயலியின் முக்கியத்துவத்தையும், மாணவர்கள் சமூகப் பொறுப்புடன் செயலாற்றுவதின் அவசியத்தைப் பற்றி உரையாற்றினார்
K.பிரகாஷ்,விளையாட்டுத் துறைச் செயலர், இரண்டாமாண்டு கணிதவியல் துறை மாணவர் நன்றியுரையாற்றினார். மற்றும் மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad