தமிழ்ப் பல்கலைக்கழக சமூக அறிவியல்துறை சார்பில் தேசிய கருத்தரங்கம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், சமூக அறிவியல்துறை நடத்தும் சமகால சமூகத்தின் விருப்பங்கள் மற்றும் தேவைகள் என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் பனுவல் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் துணைவேந்தர் (பொ) குழு உறுப்பினர் முனைவர் சி.அமுதா, துணைவேந்தர் (பொ) குழு உறுப்பினர் ,பேராசிரியர் மற்றும் மருத்துவர் . பெ.பாரதஜோதி ஆகியோர் தலைமை தாங்கினார். பதிவாளர் (பொ), கோ. பன்னீர்செல்வம், வளர்தமிழ்ப்புலத் தலைவர், பேராசிரியர்,முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர்.
தொடர்ந்து காரைக்குடி ,அழகப்பா பல்கலை கழகம் சமூகப்பணித் துறை, இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் எம் ஏ வேலுசாமி, "சமகால சமூகத்தின் போக்குகள் "என்ற தலைப்பிலும், திருச்சி ,பாரதிதாசன் பல்கலைக்கழகம், CSSEIP, உதவிப் பேராசிரியர் பி.ராமஜெயம் ,சமகால சமூகத்தின் பார்வையில் அரசியல் அறிவியல்"என்ற தலைப்பிலும், தமிழ்ப் பல்கலைக்கழகம் கடல்சார், வரலாறு மற்றும் கடல் சார் தொல்லியல் துறை, இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் V.செல்வக்குமார், சமகால சமூகத்தின் பார்வையில் வரலாற்று அறிவியல் என்ற தலைப்பிலும், மாணவ, மாணவிகளுக்கு ,சொற்பொழிவு ஆற்றினார்கள்.
முன்னதாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், உதவிப் பேராசிரியர் முனைவர் மா.அறிவானந்தன் வரவேற்றார். நிறைவில் சமூக அறிவியல் துறை, இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ச. சங்கீதா நன்றி கூறினார்.
விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அனைத்து புலத்தலைவர்கள், துறைத் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், அலுவல்நிலைப் பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக