திருப்பத்தூர் , மார்ச் 10 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜம்மணபுதூர் ஊராட்சி புது பூங்குளம் பகுதியில் திமுக அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம், உள்ளிட்ட கட்சிகளில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விலகி பாட்டாளி மக்கள் கட்சியின் திருப்பத்தூர் முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ பி சிவா மற்றும் ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்து கொண்டனர் மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் துண்டு அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் ஒன்றிய தலைவர் மணிகண்டன், சிலம்பரசன், மற்றும் தசரதன் சிவன், பிரகாசம், பொன்னுசாமி, முருகன், பார்த்திபன், இளவரசன், அஜய், சோமு, மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், என பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக