முதல்வர் மு. க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி.........வேதகோட்டைவிளையில் பொதுமக்களுக்கு கறி விருந்து அன்னதானம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 5 மார்ச், 2025

முதல்வர் மு. க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி.........வேதகோட்டைவிளையில் பொதுமக்களுக்கு கறி விருந்து அன்னதானம்.

முதல்வர் மு. க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி.........வேதகோட்டைவிளையில் பொதுமக்களுக்கு கறி விருந்து அன்னதானம்.......உடன்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பாலசிங் தொடங்கி வைத்தார்..............

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியம் வேத கோட்டைவிளையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் 72வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு சிறப்பு கறிவிருந்து அன்னதானம் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு உடன்குடி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாலசிங் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர் ஜான்பாஸ்கர், கிளை கழகச் செயலாளர்கள் ஞானதாஸ், ஞானியார் குடியிருப்பு ரமேஷ், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சமூக வலைத்தள ஒருங்கிணைப்பாளர் மானாடு பாலமுருகன், திமுக இளைஞரணி எப்ராஹிம்சீலன், ஒன்றிய பிரதிநிதி கனகராஜ்,ஸ்டீபன்,ஸ்ரீதர் உள்பட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad